திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இன்று திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள உதவும் உள்ளங்கள், மகாத்மா முதியோர் இல்லங்களில் உள்ள ஆதவரற்ற முதியோர்களுக்கு, திருப்பத்தூர் நகர கழகம் சார்பில், நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையிலான திமுகவினர், 200க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கினர்..

இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் சங்கீதா. நகர மன்ற துணைத் தலைவர் ஏ ஆர் சபியுல்லா. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல். இளைஞர் அணி அமைப்பாளர் டி எஸ் மாதேஸ்வரன். இளைஞர் அணி துணை அமைப்பாளர் அரவிந்தன். நகரத் துணைச் செயலாளர் கோ செல்வம். நதிம். சார்லஸ் நவீன் குமார். சங்கர். பெருமாள். ராஜ்குமார்.
இதில் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்..
