திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 50 சதவீதத்திற்கு மேல் நெற்பயிர்கள் மழையால் பாதிப்பு. விடியா திமுக அரசின் சரியாக தூர்வாரப்படாததே பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தான் காரணம் என கழக அமைப்பு செயலாளரும் மாவட்டக் கழக செயலாளரும் முன்னாள் அமைச்சர் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் இரா. காமராஜ் குற்றச்சாட்டு.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களுக்கு மேலாக கடும்மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கழக அமைப்பு செயலாளரும் திருவாரூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சர் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் இரா.காமராஜ் நேரில் சென்று பார்வையிட்டார் மாவட்டத்தின் பிற பகுதிகளான நன்னிலம் குடவாசல் திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை கோட்டூர் மன்னார்குடி நீடாமங்கலம் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஆறுதல் கூறினார் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து அரசின் உதவிகளை பெற்று தர வேண்டுமென கழக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார் அதனைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. திருவாரூர் மாவட்டத்தில் சுமார் மூன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது இந்த இளம் பருவகால பயிர்கள் கடந்த மூன்று நாட்களாக பெய்துள்ள கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது சாகுபடி செய்த பரப்பளவில் சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் திருவாரூர் மாவட்டத்தில் முறையாக தூர்வாரும் பணிகள் சரியாக நடைபெறாததே இந்த பாதிப்பிற்கு காரணம் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீரை வடிய வைத்து பயிர்களையும் விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும் ஏற்கனவே இந்த ஆண்டு பருவம் தவறிய மழையால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது தற்போது சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளது மழை பாதிப்புகள் குறித்து முறையாக கணக்கெடுப்பு எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு உணவு உடை மற்றும் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டும் என கழக அமைப்பு செயலாளரும் திருவாரூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சர் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் இரா.காமராஜ் தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலம் இரண்டுக்குட்பட்ட கூடல் நகர் இரண்டாவது வார்டு பாண்டியன் நகர், திருமால் நகர், அடமந்தை வழியாக மக்கள் சாலையில் நடக்க முடியாமல் மழைநீர் சூழ்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதாலும் […]
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாரத்தில் தோட்டக்கலை துறையின் கீழ் செயல்பட்டு வரும் வெங்கலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பாரம்பரிய தென்னை ரகமான அரசம்பட்டி நெட்டை ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நேரடி விற்பனை மூலம் […]
த தர்மபுரி அருகே உள்ள வத்தல்மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் உருவாகி மலையின் அடிவாரத்தில் இருந்த தரைப்பாளத்தை அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டன . இதனால் சின்னங்காடு, நாயக்கனுர், […]