ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் திரு உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிலம்பரசன் நினைவு அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்புல்லாணி தி.மு.க ஒன்றிய பொருளாளர் லாந்தை ராமகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியை தலைமையேற்று துவக்கி வைத்தார்.ஒன்றிய நிர்வாகிகள் கல்யாண சுந்தரம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளி,மாவட்ட தி.மு.க அமைப்பு சாரா ஓட்டுரணி தில்லைச்சீமை ரஹ்மான், வழக்கறிஞர் இளமாறன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி முரளி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு 1500-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிலம்பரசன் நினைவு அறக்கட்டளை நிர்வாகி,சமூக ஆர்வலர் அழகர்சாமி,பாலதர்ஷினி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
