
கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்ட விவகாரம் கோட்டாட்சியர் பேச்சு வார்த்தை தோல்வி தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தொடர் தர்ணா
காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்ககோரி கிராம நிருவாக அலுவலர்கள் ஆட்சியர் அலுவலகத்தின் தரையில் அமர்ந்து தர்ணா
நாமக்கல் மாவட்டம் நருவலூர் அக்ரஹாரத்திற்கு உட்பட்ட பெரிய கவுண்டம்பாளையத்தில் கடந்த 3-ம் தேதி அரசு புறம்போக்கு நிலத்தில் மரத்தை வெட்டியதை தட்டி கேட்ட கிராம நிர்வாக அலுவலர் ராமன் என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் திருமுருகன் தலைமறைவாகி விட்டார்.
இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் ராமனை தாக்கிய நபரை கைது செய்யக்கோரி வருவாய் அலுவலர்கள் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தின் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிராம நிருவாக அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், கிராம நிருவாக அலுவலரை தாக்கிய நபரை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் அலுவலர்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய் அலுவலர்களின் போராட்டத்தால் பொதுமக்கள் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்க முடியாமல் அனைத்து அரசு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது
இதற்கிடையில் தர்ணா ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் திருச்செங்கோடு கோட்டாட்சியர் சுகந்தி நாமக்கல் கோட்டாட்சியர் பார்த்திபன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்
ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்படாததால் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இதனால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்பு பரபரப்பு காணப்பட்டு வருகிறது
