அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலி


ராயக்கோட்டை, நவ.22-
ராயக்கோட்டை அருகே உள்ள மொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாது(44)விவசாயி. இவர் நேற்று(21-11-2024) மாலை தனது டூவீலரில் ராயக்கோட்டைக்கு வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பியுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே மாது இறந்தார். இது குறித்து மாதுவின் மனைவி ராயக்கோட்டை போலீசில் புகார் செய்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.