பெரியபட்டினம் அல் கலம் மழலையர் பள்ளி 14-வது ஆண்டு விழா கொண்டாட்டம்-ஊராட்சி தலைவர் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டினம் கிராமத்தில் உள்ள அல் கலம் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 14-வது ஆண்டு விழா மற்றும் மழலையர் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்,மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்,பேச்சுப் போட்டிகள், பட்டிமன்றங்கள் மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்ச்சிக்கு அல் கலம் கல்வி குழும தலைவர் ஷேய்க்.அப்துல் குத்தூஸ் அஸ்ஹாரி தலைமை வகித்தார்.ராமநாதபுரம் மாவட்ட தனியார் பள்ளி கல்வி அலுவலர் ரவி, மதுரை சட்ட ஆலோசகர் அஃப்ரிதா பாத்திமா மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர் காதர் இப்ராஹிம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மழலையர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.பள்ளி தாளாளர் அப்துல் ரகுமான் சிறப்பு விருந்தினர்களைப் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.அல் கலம் கல்வி குழும நிறுவனர் ஷேய்க்.அப்துல் குத்தூஸ் அஸ்ஹாரி கல்வி மற்றும் பெற்றோர்களின் பங்கு குறித்து உரையாற்றினார்.

விழாவில் பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவி அக்பர் ஜான் பீவி, ஜமாத் தலைவர்கள்,நிர்வாகிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.விளையாட்டு மற்றும் கல்வித் திறனில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் நிஷாரா பாத்திமா நன்றி உரை கூறினார். இந்நிகழ்வின் இறுதியில் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு பரிசுகளை பள்ளி நிறுவனர் வழங்கினார்.