ராமநாதபுரம் மாவட்டம் போகலூரில் செயல்பட்டுவரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவஷ்ய வித்யாலயா(என்.எஸ்.சி.பி.ஏ.வி)உண்டு உறைவிடப்பள்ளியில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் 76-வது குடியரசு தினவிழா நடைபெற்றது

.பள்ளியின் நிர்வாகி டாக்டர்.ச.மாடசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.பின்பு கொடிப்பாட்டு முடிந்தவுடன் நிர்வாகி குடியரசு தின உரை நிகழ்த்தினார்.இந்நிகழ்ச்சியில் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும்,மாணவர்களும் கலந்துகொண்டு தேசியக் கொடிக்கு உரிய மரியாதை செலுத்தினர்.இறுதியில் தேசியகீதத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
