கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 7ஆம் அணியில் நேற்று காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. தளவாய் சங்கு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அயோத்தியராயன் தலைமையிலான காவலர்கள் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். 213 காவல்துறையினர் 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்” என்ற இடத்தில் சீன இராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், காவலர் வீர வணக்க நாள் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் வருகிறது. அதேபோல கடந்த 01.09.2019 முதல் 31.08.2020 வரை வீர மரணமடைந்த 213 காவல்துறையினர் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டு முழங்க உறுதிமொழி எடுக்கப்பட்டது. போச்சம்பள்ளி 7 ஆம் அணி காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி காவலராக இருந்த மணிகண்டன் உடல்நலக் குறைவால் உயிரிழந்த அவருக்கு காவலர்கள் திரட்டும் நிதியாக 2 லட்சத்து 81 ஆயிரத்து 550 ரூபாயும் மற்றும் அவரது உடைமைகள் அவர்கள் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சு கட்டுரை ஓவியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
போச்சம்பள்ளி 7 ஆம் அணி காவலர் பயிற்சி பள்ளியில் காவலர் வீர வணக்க நாள் – தளவாய் சங்கு தலைமையில் 21 குண்டுகள் முழுங்க மரியாதை
