
ராமநாதபுரம் குமரையா கோவில் தனியார் மஹாலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான இசுலாமிய ஜனநாயக பேரவை சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மௌலவி பீர்முஹம்மது கிராஅத்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு இசுலாமிய ஜனநாயக பேரவை ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் சீனி முஹம்மது சபீர் தலைமை வகித்தார்.மாவட்ட துணை அமைப்பாளர்கள் முஜிபு, தாஜீதீன் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி நகரச் செயலாளர் யாசர் அரபாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைச்செயலாளர் விடுதலை கிட்டு, திருவாடானை தொகுதி செயலாளர் பழனிக்குமார், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செல்வம் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
மாவட்ட செய்தி தொடர்பாளர் முகவை மீரா, பரமக்குடி ஒன்றிய செயலாளர் புளியால் இபுராஹிம், எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல் ,ஐ.மு.மு.க மாநில செயலாளர் அன்வர் அலி,தி.மு.க பிரமுகர் நாகூர் மீரான், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் செய்யது இபுராஹிம் ,சமூக சேவகர் பி.வி.எம் யாசர் அராபத், மேலக்கோட்டை ஜமாத் தலைவர் சுல்தான் கலிபத்துல்லா, பொருளாளர் அப்துல் ரவூப் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
