ராமநாதபுரம் நகரில் பாஜக கிளை அமைப்புத் தேர்தல்

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகரில் உள்ள வார்டுகளில் பூத் வாரியாக பா.ஜ.க கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் தரணி ஆர்.முருகேசன் தலைமையில் தாயுமானவர் சுவாமி கோயில் அருகே நடந்தது.மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் கலாராணி கிருபாரெத்தினம் முன்னிலை வகித்தார்.மாவட்ட பொதுச்செயலாளர் மணிமாறன்,தேர்தல் அதிகாரிகள் நந்தகுமார்,சங்கீதா,கார்த்திகேயன், வீரபாகு,எஸ்.பி.குமரன்,பாக்கியராஜ்,கார்த்திக்,கார்த்தீஸ்,கணேசன் உள்ளிட்டோர் தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.
முடிவில் 99/100/103/106 முருகன்,கதிர்வேல்,ஆனந்தகுமார்,சதீஸ்குமார் ஆகியோர் கிளைத் தலைவர்களாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.