ராமநாதபுரம் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருவாடானை ஒன்றியத்தில் தந்தை பெரியார் நினைவு நாள் அனுசரிப்பு!!!

ராமநாதபுரம் மாவட்ட தலைமை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழக வெற்றிக் கழக கொள்கை தலைவர் தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்வு தலைவர் தளபதி விஜய் ஆணைக்கிணங்க,பொதுச்செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி, மாவட்டத் தலைவர் மலர்விழி பாலா தலைமையில் நடைபெற்றது.

ஆர்.எஸ்‌.மங்கலம் வடக்கு ஒன்றிய தலைவர் முருகானந்தம் ஏற்பாட்டில் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.திருவாடானை மத்திய ஒன்றிய தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் சமத்துவபுரத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.திருவாடானை தெற்கு ஒன்றிய தலைவர் தொண்டி முத்து ஏற்பாட்டில் பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.