நேயா டிரஸ்ட் சார்பில் நிர்வாக இயக்குனர் அமுதா சதீஷ்குமார் தலைமையில் விருது வழங்கும் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக மதுரை சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், பாண்டியன் அப்பளம் நிறுவனர் திருமுருகன், சமூக சேவகி போதிலெட்சுமி, பி.ஆர்.ஒவூம், நடிகையுமான மேலூர் சுமதி ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு, படிப்பு, சமூக சேவைகள், நடிகர், நடிகை மற்றும் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கி விழாவை சிறப்பித்தார்கள். பல குறும்படங்கள் இயக்கிய குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் நாகமலை புதுக்கோட்டை செந்தில்குமார், நடிகர் மீசை அழகப்பன் ஆகியோருக்கு நேயா டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் அமுதா அவர்கள் வழங்கி கௌரவித்தார்கள். அனைவருக்கும் சிற்றுண்டியும், தேநீரும் வழங்கப்பட்டது. ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, ஆர்.அப்துர் ரஹீம், எழுத்தாளர் விவேக் ராஜ், தலைவர் மீனா, பிரியா மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.
விருது வழங்கும் விழா”
