கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி நமது அகரம் ஊராட்சி குழந்தைகளுக்கு ஆபத்தான முறையில் இருந்த பழைய அங்கன்வாடி மைய கட்டிடத்தை மக்கள் சொந்த முயற்சியால் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல்வர் தனிப்பிரிவிற்கும், இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட துறைக்கு அழுதங்களைத் தந்து, கடந்த ஆண்டு குழந்தைகளை வேறு கட்டிடத்தில் அமர்த்தப்பட்டு .. ஆறு மாதங்களுக்குப் பிறகு புதிதாக கட்டிடம் தமிழக அரசால் 17 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது இது கட்டி பல மாதங்கள் ஆகியும் , குழந்தைகளின் பயன்பாட்டிற்கு வராதது ஏன் ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர் இப்பொழுது குழந்தைகளை தங்க வைத்திருக்கும் கட்டிடம் ஆபத்தான முறையில் தான் உள்ளது இதைக் கருத்தில் கொண்டு ஊராட்சி நிர்வாகம் ஒரு வார காலத்திற்குள் இதை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்
17 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பர்கூர் சட்டமன்ற தொகுதி நமது அகரம் ஊராட்சி அங்கன்வாடி மையம் திறப்பது எப்போது ???
