நல்லூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி 5 ஆம் சனிக்கிழமை முன்னிட்டு மூல மூர்த்திகளுக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. பிறகு உற்சவ மூர்த்திகளுக்கு பூமாலைகள் சாற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

சிறப்பு பூஜைகள் தலைமை அர்ச்சகர் ராஜன் ஸ்வாமிகள் மேற்பார்வையில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.