
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு திருமால் நகர் மற்றும் குள்ளாச்சாரி வட்டம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்
இவர்களுக்கு நீண்ட நாட்கள் ஆக குடி தண்ணீர் இல்லை என்ற பிரச்சினை இருந்து வருகிறது
இதனால் பலமுறை போராட்டம் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தது மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் மனு அளித்தது அடிப்படையில் இன்று திருமால் நகர் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு மற்றும் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 55 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பூமி பூஜை போட்ட எம் எல் ஏ நல்லதம்பி
இதில் திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன்
சேர்மன் சங்கீதா வெங்கடேசன்
36 வது வார்டு கவுன்சிலர் வெற்றி கொண்டான்
நகராட்சி ஆணையாளர் சாந்தி
மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்
