
இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம், இந்தியாவில் தனது, 5000வது அரீனா சர்வீஸ் சென்டரை கோவை மலுமிச்சம்பட்டியில் திறந்தது. இதனை மாருதி சுசுகி இந்தியா லிமிடெட்டின் நிர்வாக அதிகாரி ராம் சுரேஷ் அக்கெலா மற்றும் நிர்வாக துணைத் தலைவர் தகாஹிரோ ஷிராயிஷி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். அம்பாள் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அசோகன் முத்துசாமி, துணை தலைவர் அனீஸ் முத்துசாமி, சந்தான செல்வி மற்றும் ஸ்ருதி அனீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இச்சேவை மையமானது, சுமார், 45,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளதுடன், அம்பாள் ஐ.டி.ஐ-யில் பயிற்சியை முடித்து, மாருதி சுசுகியால் சான்றளிக்கப்பட்ட நன்கு பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட வலுவான குழுவைக் கொண்டுள்ள
இந்த மையத்தில் வாகனங்களுக்கான சேவைகள் மற்றும் விபத்து பழுதுபார்ப்புகள் ஆகிய இரண்டையும் ஒரே கூரையின் கீழ் தரமாக மேற்கொள்ள முடியும். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சேவை தேவைப்படும் வாகனங்களுக்கு, அதை 120 நிமிடங்களில் செய்து, அன்றைய தினமே வாடிக்கையாளரிடம் ஒப்படைக்க முடியும். மாருதி சுசூகி கார்களை டாக்சிகளாக பயன்படுத்துவோருக்கு இதனால் அதிக பலன் கிடைக்கும் என மாருதி சுசுகி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வளாகம் என்பது மாருதி சுசுகி மின்சார வாகனங்களுக்கு தேவையான சர்வீஸ் பணிகளை வழங்க தயாராக இருக்கும்படி அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்க பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
