
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் கிராமத்தில் அரசு அனுமதி இல்லாமல் இல்லீகல் மைனிங் நடைபெற்று வருவதாகவும்
மேலும் இது குறித்து பொதுமக்கள் எவரேனும் கேட்டால் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மைனிங் உரிமையாளர்கள் நடந்து கொள்வதாகவும்
இதன் காரணமாக இரவு பகலாக மலைகள் நீர்வழிப் பாதைகள், மேய்ச்சல் நிலங்கள், ஏரி குளங்கள், இது போன்ற எல்லா இடங்களிலும் இருந்தும் கனிம வளங்களை கொள்ளையடித்து செல்வதாகவும்
இதனை அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை கணிசமான தொகையை பெற்றுக் கொண்டு மெத்தனப் போக்காக செயல்படுகின்றனர் எனக் கூறி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை குறித்த கூட்டத்தில் வலிமையான மக்கள் கட்சி சார்பில் மனு அளித்தனர்
