இந்திய தொழில் கூட்டமைப்பின் கோவை மண்டலம் சார்பாக, 9வது தேசிய உயர்கல்வி மாநாடு, உயர்கல்வியை சர்வதேச மயமாக்குதல் மற்றும் தொழில் மயமாக்குதல்’ என்ற தலைப்பில் கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது.

உயர்கல்வியை சர்வதேச மயமாக்குதல் மற்றும் தொழில் மயமாக்குதல்’ என்ற தலைப்பில் கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில், 9வது தேசிய உயர்கல்வி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தொழில்துறை மற்றும் கல்வித்துறை நிபுணர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் சி.ஐ.ஐ. கோவை மண்டலத் தலைவர் மற்றும் ராஜேஷ் துரைசாமி வரவேற்புரை வழங்கினார் தொடர்ந்து அனைவரது மத்தியில் அவர் கூறியதாவது.
20 ஆண்டுகளுக்கு முன்பு வளர்ந்த நாடுகளுக்கு குறைந்த செலவில் சேவைகளை வழங்கும் நாடாக இந்தியா பார்க்கப்பட்டது. ஆனால், இன்று இந்தியா உலகிற்கே மதிப்புமிக்க பங்களிப்புகளை வழங்கும் நாடாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் இந்த மாற்றம் நமது கல்வி நிறுவனங்களால் சாத்தியமாகி உள்ளது என்றார்.
மேலும்,
எதிர்காலத்தில், உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களை உலகளாவிய பொறுப்புகளுக்கு தயார்படுத்துவதுடன், தொழில்துறையுடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வழிவகை செய்துகொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ச்சியாக இம்மாநாட்டின் தலைவர் செந்தில் கணேஷ், மாநாட்டின் தலைப்பு குறித்துப் சிறப்புரையாற்றினார். இந்திய உயர்கல்வி நிறுவனங்களுடன் பிரிட்டனில் உள்ள பல்கலைக்கழகங்கள் மதிப்புமிக்க ஆய்வு கூட்டணிகளை உருவாக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். இந்த மாநாட்டில், சி.ஐ.ஐ. தெற்கு மண்டலத்தின் முன்னாள் தலைவர் ஆர். நந்தினி,
சி.ஐ.ஐ அமைப்பின் ஐ.டபிள்யூ.என் பிரிவின் தமிழக முன்னாள் தலைவரும், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலருமான மலர்விழி,
சிஐஐ, தமிழ்நாடு பிரிவின் முன்னாள் தலைவர் சங்கர் வானவராயர், தயானந்த சாகர் பல்கலை கழகத்தின் துணைவேந்தரும், பேராசிரியருமான சத்தியநாராயணா,
சிஐஐ கோவை கல்விக்குழு பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சுஜனா அபிராமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.