இந்து அறநிலையத்துறையின் சார்பில் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் விழா நடத்தப்படுகிறது .

ஒரு பகுதியாக
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள இந்து அறநிலைக்குத் துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சாமிகோவிலில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கோவில் செயல் அலுவலர் கீதா தலைமை தாங்கினார். இதில் 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சிறப்பு தம்பதிகள் சீர்வரிசை செய்து 20 மேற்பட்ட தம்பதிகள் கௌரவிக்கப்பட்டனர் இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கிருஷ்ணன், உதவி ஆணையர் மகாவிஷ்ணு அறங்காவலர் குழு தலைவர்கள் துரைசாமி, குமரன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மூத்த தம்பதியினர் கலந்து கொண்டனர் .