
● Targeted therapy சிகிச்சை முறையில் ஆரோக்கியமான திசுக்கள் பாதுகாக்கப்பட்டு புற்றுநோய் செல்கள் மட்டுமே குறிப்பாக அழிக்கப்படுகின்றன. குறைவான பக்கவிளைவுகள் இதன் சாதகமான அம்சங்களாகும்.
● 2010-ம் ஆண்டில் நிறுவப்பட்ட பெரியவர்களுக்கான இரத்தவியல் மற்றும் குழந்தைகளுக்கான புற்றுநோயியல் துறை, உலகத்தர புற்றுநோய் சிகிச்சையை வழங்கும் முதன்மை மையமாக திகழ்கிறது.
மதுரை, பிப்ரவரி 03, 2026: இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு, ஆரோக்கியமான செல்களைப் பாதிக்காமல் புற்றுநோய் செல்களை மட்டும் அழிக்கும் ‘இலக்கு சிகிச்சை’ (targeted therapy) புதிய நம்பிக்கையை அளிப்பதாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக புற்றுநோய் தினத்தை (பிப்ரவரி 4) முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மருத்துவர்கள் கூறியதாவது:
Targeted therapy சிகிச்சை முறையின் சிறப்பம்சங்கள்:
• துல்லியம்: சாதாரண கீமோதெரபி சிகிச்சையில் நல்ல செல்களும் பாதிக்கப்படும். ஆனால், இந்த நவீன சிகிச்சையில் புற்றுநோய் செல்கள் மட்டுமே குறிவைத்து அழிக்கப்படுகின்றன.
• குறைவான பக்கவிளைவுகள்: உடலின் மற்ற உறுப்புகளுக்கு பாதிப்பு குறைவு என்பதால், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் இச்சிகிச்சையை எளிதாகத் தாங்கிக்கொள்ள முடியும்.
• உயிர்காக்கும் விகிதம்: சிகிச்சைக்குப் பின் நோயாளிகளின் உயிர்வாழும் காலமும், வாழ்க்கைத் தரமும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இரத்தப் புற்றுநோயியல் துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர் T. காசி விஸ்வநாதன் கூறுகையில்: “முன்பெல்லாம் தீவிர இரத்தப் புற்றுநோய்க்கு அளிக்கப்படும் கீமோதெரபியை முதியவர்கள் தாங்குவது கடினமாக இருந்தது. இப்போது வந்துள்ள நவீன ‘டார்கெட்டட் தெரபி’ மூலம், எங்கள் மையத்தில் சிகிச்சை பெற்ற 7 பெரியவர்களில் 5 பேர் தற்போது முழு ஆரோக்கியத்துடன் உள்ளனர். குழந்தைகளுக்கு அளிக்கப்படும் நவீன சிகிச்சைகள் மூலம், 5-ல் 4 குழந்தைகள் புற்றுநோயிலிருந்து மீண்டு வருகின்றனர். முதியவர்கள் மட்டுமன்றி சிறுவயது குழந்தைகளுக்கும் இத்தகைய நவீன சிகிச்சைகள் அதிகம் பயனளிப்பதாக இருப்பதை இத்தரவுகள் உறுதிப்படுத்துகின்றன” என்றார்.
குழந்தைகளுக்கான இரத்தப்புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் R .M அன்னபூரணி கூறியதாவது: “இனோடுசுமாப் (Inotuzumab ) போன்ற மருந்துகள் புற்றுநோய் செல்களில் உள்ள புரதத்தை அடையாளம் கண்டு, அந்த செல்களை மட்டும் நேரடியாகத் தாக்குகின்றன. இது குணப்படுத்தவே முடியாது எனக் கருதப்பட்ட நிலையிலும் குழந்தைகளுக்குப் புதிய நம்பிக்கையைத் தருகிறது.”
குழந்தைகளுக்கான இரத்தப்புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் V. அனிதா கூறியதாவது: “இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எங்கள் மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எங்களது சிகிச்சையால் 80% குழந்தைகள் குணமடைந்து வருவது ஒரு மிகப்பெரிய சாதனையாகும்.”
குழந்தைகளுக்கான இரத்தப்புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் V. S. வெங்கடேஸ்வரன் பேசுகையில், “தென் தமிழகத்திலேயே முதன்முதலாக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை (BMT) மையத்தை எமது மருத்துவமனை தொடங்கியது. இதுவரை 400-க்கும் மேற்பட்டோருக்கு இந்த சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
மருத்துவ நிர்வாகி டாக்டர்.B. கண்ணன் அவர்களும் இந்த நிகழ்வில் உடனிருந்தார்.
சர்வதேச தர சிகிச்சை மதுரையிலேயே கிடைக்கிறது:
2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் இரத்தவியல் மற்றும் குழந்தைகள் புற்றுநோயியல் துறை, சர்வதேச தரத்திலான சிகிச்சையை வழங்கி வருகிறது. இதனால் புற்றுநோய்க்கான உயர்தர சிகிச்சைக்காக மக்கள் வெளிநாடுகளுக்கோ அல்லது பிற மாநிலங்களுக்கோ செல்லத் தேவையில்லை. மதுரையிலேயே உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையைப் பெற்றுப் பயனடையலாம்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) புற்றுநோய் பதிவேடுகளின் தகவல்படி, இந்தியாவில் இரத்தப் புற்றுநோய்கள் ஆண்டுக்கு ஒரு லட்சம் மக்களில் சுமார் 4-5 பேருக்கு ஏற்படுகின்றன.
அக்யூட் லூகேமியா இரண்டு முக்கிய வகைகளாக பிரிக்கப்படுகிறது:
அக்யூட் லிம்போபிளாஸ்டிக் லூகேமியா (ALL)
அக்யூட் மைலாய்டு லூகேமியா (AML)
குழந்தைகளில் ஏற்படும் அக்யூட் லூகேமியாவில், சுமார் 80% பேருக்கு ALL காணப்படுகிறது, AML சுமார் 20% மட்டுமே. இதற்கு மாறாக, வயது முதிர்ந்தவர்களில் ஏற்படும் அக்யூட் லூகேமியாவில், AML அதிகமாக (சுமார் 80%) காணப்படுகின்றது; ALL சுமார் 20% மட்டுமே.
அக்யூட் லூகேமியா என்பது குழந்தைகளில் அதிகம் காணப்படும் புற்றுநோய்; இது மொத்த குழந்தைப் புற்றுநோய்களில் 30-40% வரை காணப்படுகிறது. நவீன சிகிச்சை முறைகளால், ALL கொண்ட குழந்தைகளில் 80-90% பேர் முழுமையாக குணமடைய முடிகிறது என்பது மிகவும் ஊக்கமளிக்கும் விஷயமாகும்.
கீமோதெரபி (Chemotherapy) லூகேமியாவின் அடிப்படை சிகிச்சையாகும். ஆனால், அதிக ஆபத்து கொண்ட நோயாளிகள், சிகிச்சையில் குணமாகாதவர்கள், மீண்டும் நோய் வந்தவர்கள், அல்லது மூப்பு, சிறுநீரகம், இதயம், கல்லீரல் போன்ற இணை நோய்கள் காரணமாக உடல் நிலை பலவீனமானவர்கள் ஆகியோருக்கு குறிப்பிட்ட இலக்கு சிகிச்சைகள் (Targeted therapy) ஒரு சிறந்த மாற்றாக அமைகின்றன.
இந்த இலக்கு சிகிச்சைகள் அதிக பாதுகாப்புடன், துல்லியமான பதிலை அளிக்கின்றன. இதனால் சிகிச்சை வழங்க கடினமாக இருக்கும் நோயாளிகளிலும் நல்ல முடிவுகள் கிடைக்கின்றன.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில், இரத்தப் புற்றுநோயாளிகளுக்காக கீமோதெரபி, இலக்கு சிகிச்சை (Targeted Treatment) மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை (Bone Marrow Transplantation) உள்ளிட்ட நவீன சிகிச்சை முறைகள் வழங்கப்படுகின்றன.
தென்தமிழ்நாட்டில் முதன்முறையாக 2015 ஆம் ஆண்டு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையைத் தொடங்கிய மையம் நாங்களே. இதுவரை 450க்கும் மேற்பட்ட எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, சர்வதேச தர முடிவுகளுடன், இரத்தப் புற்றுநோய்களில் சுமார் 70% வரை குணமடைதல் விகிதம் எட்டப்பட்டுள்ளது.
லூகேமியா சிகிச்சையில் சமீபத்திய முன்னேற்றங்களில் முக்கியமானவை ப்ளினாடுமோமாப் (Blinatumomab) மற்றும் இனோடூஸுமாப் (Inotuzumab) போன்ற புதிய இலக்கு மருந்துகள். இவை புற்றுநோய் செல்களை மட்டும் அடையாளம் கண்டு, நோயாளியின் தன் நோய் எதிர்ப்பு அணுக்களைப் பயன்படுத்தி புற்றுநோய் செல்களை அழிக்கவோ, அல்லது விஷச்சத்துகளை நேரடியாக புற்றுநோய் செல்களுக்குள் செலுத்தி அவற்றை அழிக்கவோ செய்கின்றன. இதனால் ஆரோக்கியமான செல்கள் பாதுகாக்கப்படுகின்றன.
இந்த நவீன சிகிச்சைகள் மூலம் குழந்தைகளிலும், பெரியவர்களிலும் இரத்தப் புற்றுநோய்க்கான சிகிச்சையில் சிறந்த முடிவுகளைப் பெற்றுள்ளோம். இது உயர்தர, நோயாளி மையப்படுத்தப்பட்ட புற்றுநோய் சிகிச்சை வழங்கும் எங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.…
