
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர ஆர்.பி. உதயகுமார் தலைமையில் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து கவனயீர்ப்பு தர்ணா போராட்டம்
மதுரை
கடந்த 2019 ஆம் ஆண்டு 22 கோடி மதிப்பில் எடப்பாடியார் கொண்டு வந்த புதிய பேருந்து நிலையத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரி
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில், பொதுமக்கள் சாலையில் அமர்ந்து கவனயீர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
புறவழிபேருந்துகள் திருமங்கலம் நகருக்குள் வருவதால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த அதிமுக ஆட்சியில புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது .
இதனை தொடர்ந்து அந்த திட்டம் கடந்த நான்கரை ஆண்டு காலம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை கண்டித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் கவனயீர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது இதில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், எஸ்.எஸ். சரவணன், கருப்பையா ,மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்
இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது;
மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் பகுதி என்பது தென் மாவட்டத்தில் நுழைவு பகுதியாகும்.குறிப்பாக தென் மாவட்டத்திற்கு செல்லும் புற பேருந்துகள் எல்லாம் திருமங்கலம் வழியாகத்தான் செல்லும் .இதனைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை குறைக்க வகையிம் புதிய பேருந்து நிலைய அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து அப்போது நான் அமைச்சராகவும் ,இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து மக்களின் கோரிக்கையை ஏற்று அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடியார் மற்றும் உள்ளாட்சிதுறை அமைச்சர் ஆகியோர் கவனத்திற்கு எடுத்து வைத்தேன்.
இதனைத் தொடர்ந்து நகராட்சி மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ,குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறையில் அனுமதி பெற்று கடந்த
2019 ஆண்டு, அரசாணை எண் 66 படி புதிய பேருந்து நிலையம் அமைக்க
22 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை அதற்குரிய நிலத்தை நகராட்சிக்கு அளித்தனர் இதன் மூலம் முன் நுழைவு அனுமதி வெளியிடப்பட்டது. இந்த பேருந்து நிலையம் 29,376 சதுர அடி பரப்பில் 45 பேருந்துகள் நிற்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டது.

கடந்த நான்கரை ஆண்டு காலம் திமுக அரசு இதை கவனத்தில் கொள்ளவில்லை , நாங்கள் போட்ட அரசாணை என்ன ஆச்சு என்று கூட தெரியவில்லை? ஆனால் பழைய பேருந்து நிலையத்தை புதுப்பித்து பேருந்துகளுக்கு நிறுத்த போதியம் இடவசதி செய்யாமல் அதில் வணிக கட்டணங்கள் அதிகமாக உருவாக்கியுள்ளனர்.
மக்களின் கோரிக்கையை ஏற்று எடப்பாடியார் கொண்டு வந்த புதிய பேருந்து நிலையத்தை கிடப்பில் போட்டதை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கவனயீர்ப்பு அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் .
நிச்சயம் எடப்பாடியார் 2026 ஆண்டில் ஆட்சி அமையும் அப்போது திருமங்கலத்துக்கு புதிய பேருந்து நிலையத்தை உருவாக்கி தருவார் எனக் கூறினார்.
