கந்திலி அருகே பொது வழியை சுத்தம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் திமுக நிர்வாகியை தாக்கிய குடும்பத்தினரால் பரபரப்பு

திரும்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி மாரியம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்த திமுக தெற்கு ஒன்றிய இலக்கிய அமைப்பாளர் மூர்த்தி (39) என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள சுமார் 12 அடி பொதுவழி சாலையை சுத்தம் செய்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் ( 27), அவருடைய தம்பி யுவராஜ் ( 23), அக்கா நந்தகுமாரி( 35), அம்மா ஷுலா (50) ஆகிய நான்கு பேரும் பொதுவழியை ஏன் சுத்தம் செய்கிறாய் எனக்கேட்டு மூர்த்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் கைகலப்பாக மாறியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த கோவிந்தராஜ்,யுவராஜ் ,நந்தகுமாரி, ஷீலா ஆகிய நான்கு பேரும் மூர்த்தியை சரமாரியாக கட்டையால் தாக்கியுள்ளனர்.

அதன் பின் படுகாயம் அடைந்த மூர்த்தியை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இது குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.