கோவை இடையர் பாளையம் அடுத்த அறிஞர் அண்ணா நகர், ஸ்ரீ கம்பீர சித்தி விநாயகர் திருக்கோவில் வளாகத்தில், வடவள்ளி ஆரோ மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பாக பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது..

கோவை வடக்கு மாவட்ட திமுக கழகத்தின் சார்பாகவும், அறிஞர் அண்ணா நகர் ஸ்ரீ கம்பீர சித்தி விநாயகர் திருக்கோவில் சார்பாகவும், வடவள்ளி ஆரோ மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பாக பொதுமக்களுக்கான, இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது இந்த முகாமினை, ஆரோ மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவரும், நிறுவனரும், மற்றும் நிர்வாக இயக்குனருமான ஹசிப் கான், துவக்கி வைத்தார். இந்த முகாமில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு, எடை, உயரம், இரத்த அழுத்த பரிசோதனைகள், சர்க்கரை அளவு பரிசோதனை, கொழுப்பு பரிசோதனைகள், நுரையீரல் செயல்பாடு பரிசோதனைகள், செவித்திறன் குறைபாடுகள் பரிசோதனைகள், எலும்பு அடர்த்தி பரிசோதனைகள், பிசியோதெரபி பரிசோதனைகள், மூட்டு வலி பிரச்சனைகள், பொதுமருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளைகள் செய்து அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்க பட்டது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் உள்ளிட்ட 13பேர் இம்முகாமில் கலந்து கொண்டு பரிசோதனைகள் யெய்தனர். இந்த முகாமில் ஆரோ மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி ரமேஷ் மந்திரி,
மருத்துவர்கள் கேசவராஜ், குமரேசன், வினோத், மற்றும் அறிஞர் அண்ணா நகர் ஸ்ரீ கம்பீர சித்தி விநாயகர் திருக்கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் சோ. துரைப்பாண்டியன் உள்ளிட்ட பலரும் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.