
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சமுதாய கூடத்தில் தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவ சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் இணைந்து வெல்லும் கோரிக்கை மாநாடு நடைபெற்றது இந்த நிகழ்வில் தமிழ்நாட்டில் 234 தொகுதியிலும் 68000 வாக்குச்சாவடியிலும் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 10,000 வாக்கு வங்கி உள்ள சமூகம் மருத்துவ சமூகம் எனவும் இதுவரை இந்த சமூகத்தில் இருந்து எவரும் சட்டமன்றமோ பாராளுமன்றமோ சென்றது இல்லை எனவும் அவர்களது ஒற்றை கோரிக்கைகளை கூட அரசாங்கம் செவி சாய்க்கவில்லை எனவும் எங்களது வாழ்வாதார கோரிக்கையை அனைத்து கட்சி தேர்தல் அறிக்கைகளிலும் இடம்பெற வேண்டும் என கவனயீர்ப்பு மாநாடு நடத்தினர். பின்னர் மூன்று அம்ச கோரிக்கைகளை தீர்மானத்தில் எழுதினர் 1. நெசவாளர்களுக்கு 500 யூனிட்டில இருந்து ஆயிரம் யூனிட் வரை இலவச மின்சார வழங்குவது போல் பாரம்பரிய முடி திருத்தம் வரை இலவச மின்சார வழங்க வேண்டும்
- மீனவர் சமுதாய மாணவர்கள் மீன்வள கல்லூரியில் 5% இட ஒதுக்கீடு வழங்கி அதன் மூலம் கல்வி பயின்று வருகின்றனர் அதேபோன்று தமிழ்நாடு அரசு சித்தா மருத்துவக் கல்லூரியில் பாரம்பரிய மருத்துவர் சமுதாயத்தை சார்ந்த எங்களின் மாணவர்களுக்கும் 5% சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று சட்டநாதன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது ஆனால் இதுவரை எந்த அரசும் கவனத்தில் கொள்ளவில்லை அதை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்
- இந்தியா சுதந்திர போராட்டத்தின் கலந்து கொண்டு தனது 40 வயதுக்குள் 29 முறை சிறை சென்ற சுதந்திரப் போராட்ட வீரர் விடுதலை வேங்கை வீரர் தியாகி எஸ் எஸ் விஸ்வநாததாஸ் அவர்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள் மணிமண்டபத்தில் மணி மண்டபம் அரசு விழா எடுக்க வேண்டும்
எங்களின் கோரிக்கை நிறைவேற்று விட்டால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்கள் சமுதாய மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டோம் என்று தீர்மானித்து உள்ளோம்
