கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

Oplus_131072

திருப்பத்தூர் மாவட்டம் அதிமுக சார்பில் திருப்பத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பெட்ரோல், சிலிண்டர்,சொத்துவரி, மின்சார கட்டணம் ஆகியவற்றை பலமுறை உயர்த்தி உள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே தேர்தலின் போது விலைவாசி உயர்வை கட்டுபடுத்துவேன் என கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதவி வேண்டும் என தெரிவித்தார்.

அப்போது திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர்.திருப்பதி, திருப்பத்தூர் நகர செயலாளர் டி.டி.குமார்,வாணியம்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.வி.சம்பத்குமார், திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய முன்னாள் செயலாளர் பி.கே.சிவாஜி,வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் யுவராஜ்,மாவட்ட பிரதிநிதி ராஜசேகர் உள்ளிட்ட மாவட்ட ,நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.