கடலூர்வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், விருத்தாசலம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மாவட்ட நிருவாகத்தின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விருத்தாச்சலம் நகராட்சி அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரம் அறுக்கம் இயந்திரம், மண்வெட்டி, மோட்டார் பம்புசெட் உள்ளிட்ட பேரிடர் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதையும், நகராட்சியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, விருதாச்சலம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் நகர ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணிகளையும், நாச்சியார்பேட்டை பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் குளம் தூர்வாரும் பணி மற்றும் நடைபாதை அமைத்தல், பாதுகாப்பு வேலி, மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து, விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில்
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில்
நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், 15வது நிதிக்குழு
மானிய திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞரின் கனவு
இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட
ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துறைச் சார்ந்த
அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்
போது,
விருதாச்சலம்
சட்டமன்ற
உறுப்பினர்
எம்.ஆர்.இராதாகிருஷ்ணன் , விருதாச்சலம் நகரமன்ற தலைவர்
திருமதி
சங்கவி, முருகதாஸ். விருத்தாசலம் நகராட்சி ஆணையாளர் திருமதி பானுமதி,
உதவி இயக்குனர் ஊராட்சிகள் முருகன் வட்டார வளர்ச்சி
அலுவலர்கள் இப்ராஹிம், திருமதி மோகனாம்பாள் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.