
கோவை மாநகரில், சாய்பாபா காலனியில் முன்னணி விளையாட்டு அகாடமியாக இயங்கி வரும் ரியம் ஸ்போர்ட்ஸ், தனது புதிய உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வளாகத்தைத் துடியலூரில் துவங்கியது.
இதனை,
முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா ரிப்பன் வெட்டி வைத்தார்.
இந்த விழாவில் ரியம் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுவாதி அகர்வால், இணை நிறுவனர் த்ரேதம் அகர்வால் மற்றும் எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில், ‘பிக்கிள்பால்’ விளையாட்டுக்கான தமிழகத்தின் மிகப்பெரிய விளையாட்டுத் தளங்களில் ஒன்று அமெரிக்க ஓபன் போட்டி தரத்திலான தளமாக அமைக்கப்பட்டுள்ளது, கிரிக்கெட் பயிற்சிக்காக ஆஸ்ட்ரோ டர்ஃப் மற்றும் கான்கிரீட் பிட்ச்கள், துல்லியமான பந்துவீச்சு இயந்திரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், விரைவில் ஃபிபா அங்கீகாரம் பெற்ற கால்பந்து மைதானம், ஃபிபா தரத்திலான கூடைப்பந்து தளம் மற்றும் நவீன கிரிக்கெட் பயிற்சி வசதிகள் இங்கு வரவுள்ளது
இந்த மையம் ஒரு விளையாட்டுப் பயிற்சி அகாடமியாகச் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு விளையாட்டுகளின் மேல் ஆர்வமுள்ள மக்கள் இந்த தளங்களை வாடகைக்கு எடுத்து விளையாடும் வசதியையும் வழங்குகிறது.
அதே நேரம் தேசிய அளவிலான சாம்பியன்களைக் கொண்ட பயிற்சியாளர் குழு மூலம் இங்கு உயர்தரப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
