
குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பாக, ஆண்டுதோறும் நடைபெறும் தொழில்நுட்ப, மற்றும் கலை விழாவான யுகம் 2026, தனது 14வது பதிப்பை, மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, தொழில்நுட்பம், கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் இளைஞர் தலைமைத்துவம் ஆகியவை ஒன்றிணையும் பிரம்மாண்ட நிகழ்வாக இது அமைய உள்ளது., தென்னிந்தியாவின் மிகவும் செல்வாக்கு வாய்ந்த மற்றும் மாணவர்களின் முன்னெடுப்பில் நடைபெறும் விழாக்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட யுகம், புதுமை, கலை வெளிப்பாடு மற்றும் சமூக தாக்கத்தை கொண்டாடும் முக்கிய தளமாக தொடர்ந்து விளங்கி வருகிறது.
குமரகுரு கல்லூரியின் இணை டீன் டாக்டர். விஜிலேஷ், குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் ஷீலா ஸ்ரீவாஸ்தவா மற்றும் ஏற்பாட்டுக் குழுவின் மாணவர் பிரதிநிதிகள் இன்று கோவை பந்தயசாலையில் இது குறித்த விளம்பர பலகையை வெளியிட்டனர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது.
யுகம் 2026, எனும் நிகழ்ச்சி, கோவை சரவணம்பட்டி பகுதியில், குமரகுரு கல்வி நிறுவனங்களில் நடைபெற உள்ளது. வரும், 27ம் தேதி முதல் பயிலரங்குகளுடன் நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளது, அதன் பின்னர் மார்ச் 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளது. மூன்று நாட்கள் முழுவதும் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள் மற்றும் அனுபவ நிகழ்வுகளால் உற்சாகமூட்டும் இவ்வளாகம் மையமாக மாற உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த 14வது பதிப்பில் 90க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பமற்ற நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. பொறியியல், மேலாண்மை சவால்கள் முதல் கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் பொதுத் திறன் போட்டிகள் வரை பல்வேறு துறைகளை உள்ளடக்கிய நிகழ்ச்சிகள் மாணவர்களின் பரந்த பங்கேற்பை உறுதி செய்கின்றதுடன், 60க்கும் மேற்பட்ட பயிலரங்குகள் தொழில் நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் செயல்பாட்டு வல்லுநர்களால் நடைமுறை நடத்தப்பட்டு அறிவையும் அனுபவத்தையும் வழங்குகின்றதாக தெரிவித்தனர். மேலும், மார்ச் 6 ம் தேதியன்று, சைந்தவி, ஹரிசரண், நரேஷ் ஐயர், மற்றும் டிரம்ஸ் குமரன் ஆகியோர் இணையும் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாக கூறினர்.
