தமிழக அரசு பட்டா வழங்கியும், வழங்கப்பட்ட பட்டாவிற்கான இடத்தை, அளந்து தராமல் இழுத்தடிக்கும் அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக முற்போக்கு மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவரும், வழக்கறிஞருமான புஷ்பானந்தம் தலைமையில் பொதுமக்கள் பலர் பதாகைகளை ஏந்தியவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு அளிக்கும் போராட்டத்தை நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களுக்கான இலவச சட்ட ஆலோசனைகளை வழங்கி வரும், புஸ்பாணந்தம் மூலமாக, இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரின் மனு அளித்ததன் பேரில், மனு அளிக்கப்பட்ட பலருக்கு, பட்டா வழங்கப்பட்டுள்ளது இன்னும் மீதமுள்ள பலருக்கும் பட்டா கொடுக்கப் படவில்லை, குறிப்பாக வேலாண்டிபாளையம், தடாகம், சின்ன தடாகம், கணுவாய், பன்னிமடை, கேஎன்ஜி புதூர், கணபதி, போன்ற பகுதியை சேர்ந்த மக்கள் பட்டா கேட்டு விண்ணப்பம் வழங்கிய நிலையில் பாதி பேருக்கு வந்துள்ளது மீதி உள்ளவர்களுக்கு வரவில்லை பட்டா வழங்கிய பாதி பேருக்கும் அதற்கான இடத்தை அதிகாரிகள் இன்று வரை அளந்து தரவில்லை எனவும், வட்டாட்சியர், சர்வேயர், உள்ளிட்ட அதிகாரிகளிடம், இது குறித்து கேள்வி எழுப்பினால் எந்தவித பதிலும் தெரிவிக்காமல் காலம் தாழ்த்துகின்றனர் என, புகார் அளித்துள்ளதாக கூறினர். மேலும், அரசு வழங்கிய சலுகை வீட்டு மனை பட்டாக்களை, பயன்படுத்த முடியாமல் தவிக்க விடும், அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர். இந்த மனு அளிக்கும் பொழுது வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் லட்சுமி, திவ்யா, பால்ராஜ்,
பட்டா ஏற்பாடு செய்பவர் அமுல் ராஜ், சாந்தாமணி, பரக்கத் நிஷா, திலிப், கெளசல்யா, சுகந்தி செல்வம், பவுனம்மாள், ஜெயலட்சுமி, அம்பிகா, ஜெகதீஸ்வரன், பிரியதர்ஷினி, ஆனந்த், லலிதாம்பிகை, ஜோதிமணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.