பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பழனியம்மாள் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தால் மார்ச் 30 ஆம் தேதி துவங்கி விடுமுறை நாட்கள் போக மீதி நான்கு நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என அறிவித்தது இதனை தொடர்ந்து பல்வேறு கூட்டணி கட்சிகள் மற்றும் தனித்து போட்டியிடும் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நேற்று வரை அறிவித்து வந்தனர் இந்த நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய முதல் நாள் தொடங்கியது முதல் நாளில் நாம் தமிழர் வேட்பாளர் பழனியம்மாள் கோபி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து கடைவீதி வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கோ. கோபு விடம் முதல் ஆளாக பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பு மனுவை பழனியம்மாள் கோபி தாக்கல் செய்தார்.