திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த 8000 ரூபாய் கூப்பன் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் கிடையாதுஎடப்பாடியார் அறிவித்த குளிர்சாதன பெட்டி அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும்

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் தேர்தல் காரியாலயத்தை திருப்பரங்குன்றம் வேட்பாளர் வி.வி ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார் .இந்த நிகழ்ச்சியில் மேலூர் சட்டமன்ற வேட்பாளர் பெரியபுள்ளான் என்ற செல்வம்,
மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி. வி .ஆர் .ராஜ் சத்யன், கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிவலிங்கம், டேவிட் அண்ணாதுரை உட்பட பலர் பங்கேற்றனர்

ராஜன் செல்லப்பா பேசியதாவுது

மத்திய அரசு உடன் மாநில அரசு இணக்கமாக இருந்தால் தான் மாநில வளர்ச்சிக்கு திட்டங்களை பெற முடியும். ஆனால் திமுக மத்திய அரசிடம் இருந்து எந்த வளர்ச்சி திட்டங்களையும் பெறவில்லை. எடப்பாடியார் மத்திய அரசிடம் கடந்த நான்கரை ஆண்டுகள் இணக்கமாக இருந்து 11 மருத்துவக் கல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பெற்றுக் கொடுத்தார் இது போன்ற திமுக எதையும்பெற்று தரவில்லை

ரூ.8000 கூப்பன் தருகிறோம் என்று தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்துள்ளது ஆனால் இந்த கூப்பன் வருமான வரி கட்டு குடும்பத்திற்கு கிடையாது வருமான வரி கட்டாத குடும்பத்திற்கு தான் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்

குறிப்பாக இன்றைக்கு ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் வருமான வரி கட்டுகிறார்கள் நகர்புறத்தில் பெரும்பாலும் வருமான வரி கட்டுகிறார்கள் ஆகவே திமுக தேர்தல் அறிக்கை என்பது மக்களை ஏமாற்றும் அறிக்கையாக உள்ளது

இன்றைக்கு எடப்பாடியார் பிரிட்ஜ் அறிவித்துள்ளார் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்

தற்போது இந்த ஐந்து வருடத்தில் எந்த வளர்ச்சி திட்டங்களையும் திமுக செய்யவில்லை குறிப்பாக மதுரை மாநகராட்சி எடுத்துக் கொண்டால் அதிக அளவில் விரிவாக்கப்பட்ட பகுதிகள் உயர்ந்துள்ளது ஆனால் திட்டங்களும் எதுவும் இல்லை எனக் கூறினார்.