கோவை ரோட்டரி கிளப் ஆப் பெரியநாயக்கன்பாளையம் நார்த் எனும் க்ளப் தொடக்க பட்டது.புதிய கிளப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்றுஆனைகட்டி பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்

ரோட்டரி கிளப் ஆப் பெரியநாயக்கன்பாளையம் நார்த், ஆர். ஐ மாவட்டம் 3203 சார்டர் இன்ஸ்டாலேஷன் விழா கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ஜோதிபுரம் பகுதியில் உள்ள கே வி என் மஹாலில் நடைபெற்றது.
ரோட்டரி கிளப் ஆப் காரமடை ஆதரவுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்தும், மணி அடித்தும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஸ்பான்சர் கிளப் ரோட்டரி கிளப் ஆப் காரமடை தலைவர் ரோட்டேரியன் எம்.பி.ஹெச்.எப் குமணன் நடராஜன் வரவேற்புரை வழங்கினார்.
தொடர்ந்து புதிதாக தொடங்கப்பட்ட ரோட்டரி கிளப் ஆப் பெரியநாயக்கன்பாளையம் நார்த் கிளப்பில் இணைந்த உறுப்பினர்களுக்கு பதவியேற்பு சத்தியப்பிரமாணத்தை அசிஸ்டண்ட் கவர்னர் ரோட்டேரியன் விஜய் பிரபு நடத்தி வைத்தார். அதையடுத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் ரோட்டரி கிளப் பேட்ஜ் அணிவிக்கப்பட்டு உறுப்பினர் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர். இதில் ரோட்டரி கிளப் ஆப் பெரியநாயக்கன்பாளையம் நார்த் சார்ட்டர் தலைவராக ரோட்டேரியன் முகமது ஹனீஃப், சார்ட்டர் செயலாளராக ரோட்டேரியன் ராஜசேகர், சார்ட்டர் பொருளாளராக ரோட்டேரியன் ரவிகுமார் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டு, ஆனைகட்டியில் செயல்பட்டு வரும் மலைவாழ் மக்கள் உண்டு உறைவிடப் பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்களை புதியதாக தொடங்கப்பட்ட ரோட்டரி கிளப் ஆப் பெரியநாயக்கன்பாளையம் நார்த் நிர்வாகிகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், 3203 மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் தனசேகர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரோட்டேரியன் லோகநாதன், திருப்பூர் நியூ கிளப் புரமோஷன் சேர் ரோட்டேரியன் வேலுசாமி மற்றும் மாவட்ட உறுப்பினர் சேர்க்கை சேர் ரோட்டேரியன் சுரேந்திரன், நியூ கிளப் ஆலோசகர் ரோட்டேரியன் சிவசதீஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது