பென்னாகரம் சட்டமன்ற அலுவலகத்தில்சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி எம்.எல்.ஏ தலைமையில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் உலகம் முழுவதும் உள்ள தமிழர் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற அலுவலகத்தில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி எம்.எல்.ஏ தலைமையில் கட்சி உறுப்பினர்கள் தொண்டர்கள் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் வைத்து இனிப்புகள் பரிமாறி பொதுமக்களுக்கு கரும்புகள் வழங்கி கொண்டாடினர்.