கோவை சாய்பாபா காலனியில், க்ரீம் ஸ்டோன் ஐஸ்கிரீம் நிறுவனம், தனது புதிய கிளையை கோலாகலமாக தொடங்கியது. சுமார் 1000 சதுரடியில் துவங்கப்பட்டுள்ள இக்கிளையில் வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது..

இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் புதுமையான ஐஸ்கிரீம் பிராண்ட் என நற்பெயர் பெற்ற, க்ரீம் ஸ்டோன் ஐஸ்கிரீம், கோவை சாய்பாபா காலனியில் தனது புதிய மற்றும் மிகப்பெரிய கிளையை தொடங்கியது.
க்ரீம் ஸ்டோன் நிறுவனம், தனது ப்ரத்யேக சுவைகளில், மக்கள் ஐஸ்கிரீமை அனுபவிக்கும் முறையை மாற்றியமைத்துள்ளது. கடைசி ஸ்பூன் வரை ஒரே சுவையை வழங்கும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதோடு தரம் மற்றும் சரியான விலை ஆகியவற்றை இணைத்து, குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் ஐஸ்கிரீம் ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளது. முழுக்க முழுக்க 100சதவிகித சைவ முறையில் தயாரிக்க படும் ஐஸ்க்ரீமை சுவைத்து பாக்க தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.


மேலும் துவங்கபட்டுள்ள இக்கிளை குறித்து கிளையின் உரிமையாளர் திவ்யா, மற்றும் அவரது கணவர் ஆதித்யா ஆகியோர் கூறியதாவது..
சுமார், 1,000 சதுர அடியில் அமைந்துள்ள இக்கிளை, வண்ணமயமான, விசாலமான இடமாக காட்சி பெற்றுள்ளது. மெல்லிய இசை, வசதியான இருக்கைகள் மற்றும் குளிர்சூழல் கொண்டு, ஒவ்வொரு வருகையையும் மறக்க முடியாத நினைவாக மாற்றுகிறது.

மேலும், இரு சக்கர வாகனங்களுக்கும் நான்கு சக்கர வாகனங்களுக்கும் போதுமான பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்துள்ளதாகவும், அதனால் வாடிக்கையாளர்கள் எந்த சிரமமும் இல்லாமல் வரலாம். விரைவில், காரிலிருந்தே ஆர்டர் செய்யும் சேவையையும் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.