
நவீன வசதிகளுடன் கூடிய உள்கட்டமைப்பும், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடனும் செயல்பட்டு வருகின்ற, இந்தியாவின் முன்னணி 10 கியா டீலர்களில் ஒன்றான பிரசன்னா கியா நிறுவனம், கோயம்புத்தூரில் ஆல்-நியூ கியா செல்டோஸ் காரை பெருமையுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. கோவை- திருச்சி சாலை, அவினாசி சாலை, பொள்ளாச்சி, ஊட்டி, திருப்பூர், அவினாசி, ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளுக்கு முழுமையான சேவையினை வழங்கி வரும் பிரசன்னா கியா நிறுவனம், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோமொபைல் துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்துள்ளது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு, வாடிக்கையாளர்களால் அதிகம் நம்பப்படும் ரீடெய்ல் வணிக நிறுவனம்” என்ற விருதையும் பெற்றுள்ளது.
கம்பீரமான வடிவமைப்பு, நவீன தொழில்நுட்பம் மற்றும் இந்த பிரிவு கார்களில் முன்னணி பாதுகாப்பு அம்சங்களுடன், பிரிமியம் எஸ்யூவி கார்கள் பிரிவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி உள்ளது ஆல்-நியூ கியா செல்டோஸ், சிறப்பான டிரைவிங் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் ஆனது செயல்திறன். சொகுசான பயணம் மற்றும் புதுமைகள் ஆகியவற்றின் சிறந்த கலவையாக திகழ்கிறது.
ஆல் நியூ கியா செல்டோஸ் சக்திவாய்ந்த மற்றும் எரிபொருள் சிக்கனமான என்ஜின் வகைகளில் கிடைக்கிறது,
1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் – மேனுவல், ஐவிடி மற்றும் டீசிடி டிரான்ஸ்மிஷன் வகைகளில் கிடைக்கிறது.
1.5 லிட்டர் டீசல் என்ஜின் – மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வகைகளில் கிடைக்கிறது.
விலை விவரங்கள்:
பெட்ரோல் மாடல்கள் ரூ. 10.99 லட்சம் முதல்டீசல் மாடல்கள்ரூ. 12.59 லட்சம் முதல்பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு வகைகளும் இந்த பட்ஜெட்டில் சிறப்பான மதிப்பை வழங்குவதால், புதிய கியா செல்டோஸ் அதன் பிரிவில் மிகவும் கவர்ச்சிகரமான தேர்வுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த வகை கார்களின் பிரிவில் முன்னணிஅம்சங்கள், மேம்பட்ட எடீஎஎஸ் தொழில்நுட்பம், பிரீமியம் உட்புற வடிவமைப்பு மற்றும் சிறந்த ஓட்டுநர் அனுபவம் ஆகியவற்றுடன், செல்டோஸ் அதன் விலை வரம்பில் சிறந்த மதிப்புள்ள எஸ்யுவி-யாக தனித்து நிற்கிறது கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து பிரசன்னா கியா ஷோரூம்களிலும் டெஸ்ட் டிரைவ் மற்றும் முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் இப்போது ஆல்-நியூ கியா செல்டோஸ் காரினை நேரடியாக ஓட்டிப்பார்த்து வாங்கி மகிழலாம். எதிர்பார்ப்பதை விட உண்மையிலேயே அதிகமான வசதிகளை உள்ளடக்கிய ஒரு பிரீமியம் எஸ்யுவி-யான புதிய கியா செல்டோஸ் காரினை இயக்கும் அனுபவத்தை பெற்று மகிழ்ந்திட ஆட்டோமொபைல் ஆர்வலர்களையும், மதிப்புமிக்க வாடிக்கையாளர்களையும் அன்புடன் அழைக்கிறது பிரசன்னா கியா ஷோரூம்
