கோவை துடியலூர் அருகே வி எஸ் கே நகரில் உள்ள துடியலூர் அரிமா சங்க அறக்கட்டளை அரங்கத்தில் கோவை சங்கமம் அரிமா சங்கம் மற்றும் துடியலூர் அரிமா சங்கம் இணைந்து முப்பெரும் விழா நடத்தினர். இவ்விழாவில் பாடிபில்டிங் மற்றும் வெயிட் லிப்டிங் போட்டிகளில் இந்திய அளவிலும், ஆசிய அளவிலும் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ள வீராங்கனை தமிழ்செல்விக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஒரு லட்சம் ரூபாய் ஸ்பான்சர்ஸிப் வழங்கினர்.

கோவை சங்கமம் அரிமா சங்கம் மற்றும் துடியலூர் அரிமா சங்கம் இணைந்து இரு சங்கங்களில் கூட்டம், மண்டல மற்றும் பிராந்திய தலைவர்கள் சிறப்பு வருகை, குடும்பவிழா என முப்பெரும் விழா கொண்டாடினர்.

கோவை துடியலூர் அருகே வி எஸ் கே நகர் பகுதியில் உள்ள துடியலூர் அரிமா சங்க அறக்கட்டளை அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில், சங்கமம் அரிமா சங்க தலைவர் தீப்ரா மற்றும் துடியலூர் அரிமா சங்க தலைவர் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கி, மணி ஓசையுடன் விழாவை தொடங்கி வைத்து அனைவரையும் வரவேற்றனர்.

தொடந்து அரிமா சங்க உறுதிமொழி வாசிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் போர்களில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து மண்டல தலைவர்கள் விஸ்வநாதன், பெருமாள், ராஜசேகர் ஆகியோர் சிறப்பு வருகைபுரிந்து இரு சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து பேசினர். மேலும் துடியலூர் அரிமா சங்க செயலாளர் நிவாஸ் கடந்த 3 மாதங்களில் துடியலூர் அரிமா சங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து எடுத்துக்கூறினார்.

கேபினட் செயலாளர் அனில்சிங், பொருளாளர் சவுந்திரராஜன் ஆகியோர் குடும்பவிழா குறித்து பேசினர். தொடர்ந்து பாடிபில்டிங் மற்றும் வெயிட் லிப்டிங் போட்டிகளில் இந்திய அளவிலும், ஆசிய அளவிலும் பதக்கம் வென்று பல்வேறு சாதனைகள் செய்துள்ள வீராங்கனை தமிழ்செல்விக்கு அரிமா சங்கங்கள் சார்பில் சால்வை அணிவித்து சிறப்பு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

மேலும் அவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அரிமா சங்கம் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் ஸ்பான்சர்ஸிப் வழங்கினர். தொடந்து பேசிய தமிழ்செல்வி சாதனைகள் செய்ய வயது முக்கியமில்லை எந்த வயதிலும் சாதனைகள் செய்யலாம். நான் எனது 33 வயதிற்கு பிறகுதான் பாடிபில்டிங் மற்றும் வெயிட் லிப்டிங் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றதாக தெரிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் மாவட்ட கவர்னர் பாரதி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கேபினெட் தலைமை ஆலோசகர் பன்னீர் செல்வம், வீராங்கனை தமிழ்செல்வியின் சாதனைகளை பாராட்டி பேசினார்.

இதையடுத்து இரு சங்கங்களில் கூட்டுக்கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக முன்னாள் சர்வதேச அரிமா சங்க இயக்குநர் கே ஜி ராமகிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது இரு சங்கங்களும் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், தொடர்ந்து சேவைகளை செய்து வர வாழ்த்துவதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் துடியலூர் அரிமா சங்க தலைவர் ரமேஷிற்கு எம் ஜே எப்ற்க்கான கேடயத்தை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர். இந்நிகழ்சிகளை ஏ வி முருகேஷ், பால குருநாதன், ஜாம் பிரின்ஸ் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

இவ்விழாவில் இரண்டாவது மாவட்ட கவர்னர் ராதிகா மது, முகம்மது ஜின்னா, அய்யாசாமி, கோவை சங்கமம் அரிமா சங்க செயலாளர் சந்தோஷ், பொருளாளர் மீனாட்சி சுந்தரம், துடியலூர் அரிமா சங்க பொருளாளர் பூபதி, இளங்கோ, சுப்பையா, ஆனந்த், சுந்தர் பாபு, தமிழ்செல்வன், சண்முகவடிவேல், ரமனன், சுந்தர்ராஜன், ராமமூர்த்தி, முருகேசன், கோவை சங்கமம் மற்றும் துடியலூர் அரிமா சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழா இறுதியில் அறிவு நம்பி நன்றி கூறினார். தொடந்து அனைவருக்கும் சைவ அசைவ விருந்து பரிமாரப்பட்டது.