போச்சம்பள்ளி அடுத்த அத்திக்கானூர் கிராமத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 ஆவது இனிய பிறந்தநாளை முன்னிட்டு 75 கிலோ கேக் வெட்டி ரவி சசிகுமார் தலைமையில் நடைபெற்றது

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த அத்திக்கானூர் கிராமத்தில் நமது இந்திய திருநாட்டின் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 75 கிலோ கேக் வெட்டி பாஜக கே.டி.ரவி தலைமையில் நடைபெற்றது
கூட்ரோட்டில் பொதுமக்களுக்கு கேக்கு மற்றும் இனிப்புகள் 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் கவியரசு, பாஜக மண்டல தலைவர்கள் சுப்பிரமணி, ராஜேஸ்வரி மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் சசிகுமார், ரவிச்சந்திரன், சரவணன், வெங்கடேசன், சபரி, துரைராஜ், ரமேஷ், பிரசாந்த், செந்தில், பாண்டியன், நெசவாளர் பிரிவு சஞ்சீவ்ராஜ் சிவன், பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர் . இதைத்தொடர்ந்து மத்தூரில் உள்ள சிவன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து பின்னர் மத்தூர் பேருந்து நிலையத்தில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் இதில் ஏராளமான கட்சித் காவிய சொந்தங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்