
கோடை காலம் நெருங்கி வருவதால் வனப்பகுதிகளில் காட்டு தீ ஏற்படாமலும் பரவாமலும் இருக்க வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தர்மபுரி வன மண்டல தலைமை வன பாதுகாவலர் உத்தரவின் பேரில் தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் மேற்பார்வையில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சார்பில் ஒகேனக்கல் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று ஒகேனக்கல் வனச்சரக எல்லைக்குட்பட்ட கிராமமான போடூர் வன சோதனைச் சாவடி பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் சிவகுமார் கிராம மக்களிடம் காட்டு தீ ஏற்படும் விதங்களான வனப் பகுதியில் செல்லும்பொழுது வனப்பகுதிக்குள் புகை பிடிக்கக் கூடாது, வனப்பகுதியில் மது அருந்தக்கூடாது, பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் பாட்டில்களை வனப்பகுதியில் போடக்கூடாது, வனப் பகுதிகளில் உள்ள கோயில்களில் தீபம் ,சூடம் பற்ற வைக்கும் போது ஏற்படும் தீயை தவிர்க்க வேண்டும், வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ப்பதை தவிர்க்க வேண்டும், வனப் பகுதி ஓரங்களில் விவசாயக் கழிவுகள் எரிப்பதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட காட்டுத் தீ ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்கள் இடம் எடுத்துரைத்தார் மேலும் போடூர் கிராம மக்களுக்கு காட்டுத் தீ எவ்வாறு ஏற்படுகிறது என்பதை விளக்கும் விதமாகவும் காட்டுத் தீ ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலவச எண்களான மாநில அளவிலான காட்டுத் தீ தடுப்பு அலைபேசி எண். 1800 4254 409 மாவட்ட அளவிலான அலுவலக கட்டுப்பாட்டு அறை எண். 1800 4254 586 ஆகிய எண்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. இந்த விழிப்புணர்வில் ஒகேனக்கல் வனவர் சுதாகர் , வனக்கப்பளர்கள் காளிமுத்து,செல்வம்,அரவிந்த் மற்றும் வனத்துறை பணியாளர்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ள போடூர் கிராம மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
