
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் பகுதியில் எலக்ட்ரானிக்ஸ் டெக்னீசியன் அசோசியேசன் செயற்குழு கூட்டம் சங்க தலைவர் வின்சென்ட்பால் அவர்கள் முன்னிலையில், செயலாளர் ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஆலோசனை குழு பொறுப்பாளர்கள் அக் மணிகண்டன், ஷனாவஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நிர்வாக குழு பொறுப்பாளர்கள்,செயற்குழு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் சங்கம் அரசு அங்கீகாரம் பெற்றதை அனைவரும் மகிழ்ச்சியுடன் இனிப்பு வழங்கி சிறப்பித்தனர்.
இறுதியில் சங்கம் பொருளாளர் பார்த்திபன் அவர்கள் நன்றியுரை வழங்கி நிறைவு செய்தார்.
