
கோவை சிவாஜி காலனி பகுதியில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் மாநில துணைத்தலைவராக வழக்கறிஞர் புஷ்பானந்தம் செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம், கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது..
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது. இக்கட்சியின் மூலமாக, பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்து வரும், வழக்கறிஞர் புஸ்பாணந்தம் தலைமையில் இந்த மனுவை ஆட்சியரின் பார்வைக்கு கொண்டு வருவதாகவும், இதன் ஒரு பகுதியாக கடந்த இரு, வருடங்களுக்கு முன்பு, கோவை மாவட்ட ஆட்சியரிடம் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்க வேண்டும் என கேட்டு விண்ணப்பம் வழங்கினோம். இந்த விண்ணப்பத்தின் பேரில், மனுக்கள் வழங்கிய பலருக்கும், பல்வேறு பகுதிகளில் தமிழக, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இடத்திற்கான பட்டா வழங்கப்பட்டது. சுமார் 50 சதவீதத்திற்கும் மேலான நபர்களுக்கு இன்னமும் பட்டா வழங்கப்படவில்லை, அவ்வாறு வழங்கப்படாமல் உள்ள நபர்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டாக்களை வழங்கிட வேண்டும் எனவும், பட்டாக்கள் வழங்கிய ஏழை எளிய மக்களுக்கு வழங்க பட்ட இடத்திற்கான அளவுகளை உடனடியாக அளவீடு செய்து தர வேண்டும் எனறு, அதிகாரிகள் கவனத்திற்கு இன்று மீண்டும் மனுக்களாக வழங்கி உள்ளார் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் திவ்யா, லட்சுமி, பாயம்மா தெளலத், தினகரன், பால்ராஜ், செல்வராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
