12 ஜோதிலிங்கத்தை தரிசனம் செய்ய ஆல் ஓவர் இந்தியா சைக்கிளில் பயணம் செய்த வாலிபர்!114 நாட்களில் 9000 கிலோ மீட்டர் கடந்து சாதனை!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த டிவி துரைசாமிநகர் பகுதியை சேர்ந்தவர் டெல்லிபாபு (28) சிவன் பக்தர்

இவர் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா முழுவதும் உள்ள 12 ஜோதி லிங்கத்தை காண 20 ஆண்டு பழமையான தனது சைக்கிளில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தர்பிரதேஷ், உத்தர்காண்ட், பீகார், ஜார்கண்ட், வெஸ்ட் பெங்கால், ஒடிசா உள்ளிட்ட 14 மாநிலங்கள் வழியாக சுமார் 114 நாட்கள் பயணம் செய்து 9000 க்கும் மேல் கிலோமீட்டர் தூரம் பயணித்து

கிருஷ்ணேஷ்வர், பீமாஷங்கர், திரிம்பகேஷ்வர், சோம்நாத், நாகேஷ்வர், கேதார்நாத், மகாகாலேஷ்வர், ஓம்காரேஸ்வர், காசி, பைதிநாத், மல்லிகார்ஜுன், ராம்நாத் ராமேஷ்வர் ஆகிய 12 ஜோதிலிங்கத்தை கண்டு தரிசனம் செய்து சாதனை படைத்துள்ளார்