கொடையாஞ்சி கிராம மக்கள் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு..

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்கு கொடையாஞ்சி பாலாற்றில் இருந்து ராட்சத பைப்பு மூலமாக குடிநீர் சுமார் 55 ஆண்டுகளாக கொண்டு சென்று நகர மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது‌

குடிநீர் செல்லும் சிமென்ட் ராட்சத பைப்பு சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு சாலையின் நடுவே அமைக்கப்பட்டு உள்ளதால் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதும் மேலும் இதனால் சாலை பழுதாகுவதும் அதை சரி செய்வதற்கு நகராட்சி நிர்வாகம் பல மாதங்கள் எடுத்துக்கொண்டு அதனை சரி செய்வதற்காக தோண்டப்படும் பள்ளத்தால் அதிகளவில் சாலை சேதம் அடைகின்றன இதனால் அவளியாக செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.

தற்பொழுது புதிய பைப் மாற்றுவதற்காக நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகின்றது.

இது குறித்து கொடையாஞ்சி கிராம மக்கள் நகராட்சி ஆணையாளர் இடம் மனு ஒன்றை பொதுமக்கள் அளித்துள்ளனர்.

20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையாக வாணியம்பாடி – கொடையாஞ்சி செல்லும் சாலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே சாலை பாதிப்பு அடைவதாகவும் அதனால் புதிதாக குடிநீர் பைப்பை மாற்றும்போது பாலாற்று படுகை பக்கமாவோ? அல்லது சாலை ஓரமாகவோ? அமைக்க வேண்டும் புதிதாக போடப்பட்டுள்ள சாலை பாதிப்பு ஏற்படாத வண்ணம் செய்ய வேண்டும் என மக்கள் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்..