தஞ்சை பெரிய கோவிலில் பவுர்ணமி திருதென்கைலாய வலம்: பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது

தஞ்சாவூா், அக்.15-தஞ்சாவூர்
பெரிய கோவிலை சுற்றி கடந்த மாதம் பவுர்ணமி வலம் வரும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த மாதம் பவுர்ணமி தினம் இன்று மாலை 6 மணிக்கு திருதென்கை
லாய வலம் தொடங்கி நாளை காலை 6 மணி வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில் திருதென்கைலாய வலம் வரும் பாதை , பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் , குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளை நேற்று சண். ராமநாதன், ஆணையர் கண்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் மேயர் சண் ராமநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கடந்த மாதம் பௌர்ணமி வலம் வரும் நிகழ்ச்சியில் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொண்டு வலம் வந்தனர்.
திருவண்ணாமலைக்கு நிகராக பக்தர்கள் வலம் வந்தனர்.
நாளை மாலை 6 மணிக்கு திருதென்கைலாய வலம் வரும் நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. இதில் 50 ஆயிரம் பேருக்கும் மேலானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். பக்தர்களின் வசதிக்காக 50 சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என எம்.பி, போக்குவரத்து அதிகாரியிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தோம். அதன் அடிப்படையில் நாளை மாலை தஞ்சாவூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் வழியாக ராஜராஜ சோழன் சிலை, மாவட்ட மைய நூலகம் வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதேபோல் இங்கிருந்தும் புதிய பஸ் நிலையத்துக்கு பஸ்கள் இயக்கப்படும். இதற்காக நாளை மாலை 6 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணி வரை மாவட்ட மைய நூலகம் பகுதி தற்காலிக பஸ் நிலையமாக செயல்படும்.
இதை போல் பக்தர்கள் வசதிக்காக
செங்கிப்பட்டி ,பட்டுக்கோட்டை, பேராவூரணி, மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வலம் வரும் பாதையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவறை வசதி, மருத்துவ வசதி, மின்விளக்கு வசதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அமர்வதற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் தங்களது உடல்களை பரிசோதனை செய்ய இலவச மருத்துவ குழுவும் தயார் நிலையில் உள்ளது. ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மழைக்காலம் என்பதால் பக்தர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பிரசாதம் வழங்கும் நெறிமுறைகளும் ஒழுங்குப் படுத்தப்பட்டுள்ளது. நாளை சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வலம் வருவர் என எதிர்பார்க்கிறோம்.
வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தஞ்சை மாநகராட்சி சார்பில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. 800 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். 10 ஜேசிபி வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் 100 என அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. பாதிப்பு ஏற்படும் பகுதியில் உடனடியாக மீட்பு பணிக்கு செல்வதற்கு வசதியாக அந்தந்த பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டபத்தில் பணியாளர்கள் தங்கி பணிகளை செய்து வருகின்றனர். உதவி தேவைப்படுபவர்களுக்கு உடனே அவர்கள் விரைந்து சென்று பணிகள் செய்வார்கள். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர்.
வெண்ணாறு, வெட்டாறு, புது ஆறு என அதிகளவில் ஆற்று பகுதிகள் உள்ளதால் எவ்வளவு பெரிய மழை வெள்ளம் வந்தாலும் உடனே ஆற்றில் வடிந்து செல்லும் வகையில் மாமன்னர் நடவடிக்கை எடுத்தார். அதனை பின்பற்றி அனைத்து ஆறுகளும் தூர்வாரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி செயற்பொறியாளர் சேர்மகனி, சதய விழா குழு உறுப்பினர் ராமநாதன் மற்றும் பலர் உடனிருந்தனர். ச