
தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் திருப்பத்தூருக்கு வருகை தர இருக்கும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் மனு கொடுத்தனர் தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் முனிசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஜய் வரைய இருக்கும் நாளில் அன்று பாதுகாப்பு வேண்டும் என்று மனு கொடுத்தனர் திருப்பத்தூர்

முழுவதும் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கு பெறுவார் என மாவட்ட தலைவர் முனிசாமி தெரிவித்தார் திருப்பத்தூர் மாவட்டம் ஒரே இடத்தில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற இருப்பதால் பாதுகாப்பு வேண்டி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் மனு கொடுத்தனர் இதில் பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரச்சாரம் நடக்கும் இடத்தை ஆய்வு செய்து பாதுகாப்பு வழங்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தனர் இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் மனு கொடுக்க வந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது
