மத்திய அரசை குறை கூறிய எம்எல்ஏ! தொலைதூரம் சென்று கல்வி பயின்று வந்த எங்களை நாட்றம்பள்ளியிலை கல்லூரி அமைத்துக் கொடுத்த முதல்வருக்கு நன்றி!14.50 கோடி மதிப்பீட்டின் கட்டப்பட்ட கல்லூரி திறப்பு விழாவில் மாணவர்கள் நெகிழிச்சி!

10 ஆண்டு காலமாக இருந்தா முன்னாள் கல்வித்துறை அமைச்சர் செய்ய முடியாததை நாங்கள் செய்தோம் மாவட்ட கவுன்சிலர் பேச்சு!

தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் 14.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

அப்போது மேடையில் பேசிய மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி

திருப்பத்தூரில் 10 ஆண்டுகளாக கல்வித்துறை மற்றும் பல்வேறு அமைச்சர் பதவிகளில் இருந்த கே சி வீரமணி செய்ய முடியாததை தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்து முடித்துள்ளார் நாட்றப்பள்ளியில் பிரமிக்கும் வகையில் கல்லூரி கட்டியுள்ளார் இதுவே அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டிருந்தால் முன்னாள் தலைமுறைகள் இங்கு படித்திருக்கும் என பேசினார்.

அதன் பின்னர் பேசிய ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ்

திருப்பத்தூர் மாவட்டத்தின் பொது மக்களின் கோரிக்கையான மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட 75 ஏக்கர் நிலத்தில் தேர்வு செய்யப்பட்டு அனைத்து திட்ட மதிப்பீடு போடப்பட்டு மத்திய அரசிடம் ஒப்புதலுக்காக காத்திருந்த போதிலும் இதுவரை ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது என மத்திய அரசையும் குறை கூறினார்.

அதன் பின்னர் நிகழ்ச்சியில் முடிவில் பேசிய கல்லூரி மாணவ மாணவிகள்

தமிழக முதல்வர் கல்லூரி மாணவிகளுக்கென புதுமைப்பெண் திட்டம் மற்றும் அரசு பேருந்தில் இலவச பயணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார்.

அதேபோல திருப்பத்தூர் மாவட்ட மாணவ மாணவிகள் தொலைதூரம் சென்று கல்லூரியில் பயின்று வந்த நிலையில் நாட்றம்பள்ளியிலேயே அறிவியல் மற்றும் கலை கல்லூரி உருவாக்கித் தந்திருக்கிறோம்
மேலும் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர் மாவட்ட சேர்மன் என்கேஆர் சூரியகுமார் வெண்மதி முனிசாமி சேர்மன். மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர் சிங்காரவேலன். ஜோலார்பேட்டை மாவட்ட கவுன்சிலர் ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார். ஜோலார்பேட்டை நகர செயலாளர் அன்பழகன் நாட்றம்பள்ளி இளைஞர் அணி அமைப்பாளர் கீர்த்தி. கபிலன்.திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்

மேலும் மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுபவர் தமிழக முதல்வர் என பேசி நன்றியை தெரிவித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்…