தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்கம் சார்பாக மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று திருப்பத்தூரில் நடைபெற்றது

தமிழக ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கத்தின் திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் நிர்மலா (எ) விமலா தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வினோத் முன்னிலை வகித்தார். ஏஐடியுசி
மாநிலத் துணைத் தலைவர் தேவதாஸ் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கோரிக்கைகளை விளக்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வாரம் 7 நாட்கள் வேலை என்பதை ரத்து செய்ய வேண்டும். தினமும் காலை 7 மணிக்கு கள ஆய்வு என்பதை ரத்து செய்ய வேண்டும். கடந்த ஜனவரி முதல் வழங்காமல் நிலுவையில் உள்ள தொகுப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
தொழிலாளருக்கு வாரத்துக்கு ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் 7 நாட்களும் வரவேண்டும் வேலைக்கு என்று ரத்து செய்ய வேண்டும்

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை பறிக்க வேண்டாம்
காலையில் மணி ஏழு மணிக்கு எல்லாம் கள ஆய்வு என்பதை நிறுத்தி விட வேண்டும்

வழங்கும் ஊதியத்திற்கு 4 மணி நேரமே வேலை செய்வோம்

அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சேகரிக்க மாட்டோம்
கடந்த ஜனவரி முதல் சுகாதார ஊக்குவிப்பாளருக்கு வழங்காமல் நிலுவையில் உள்ள தொகுப்பு ஊதியத்தை உடனடியாக வழங்கி விட வேண்டும்

தள்ளுவண்டி மூன்று சக்கர வாகன வண்டிகளில் குப்பை சேகரிக்க மாட்டோம் போதுமான மின்கலன் வண்டிகளை உடனடியாக வழங்க வாங்கி வண்டிகளுக்கு பராமரிப்பு மற்றும் பழுகுகளை நீக்க நடவடிக்கை எடுத்திடு என்ற அம்ச கோரிக்கைகளை வைத்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தூய்மை பணியாளர்கள் ஏராளமானவர் இந்த நிகழ்ச்சி கலந்துகொண்டு கண்டன கோசனங்களை எழுப்பினார்கள்