
திருப்பத்தூர் மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் தூய நெஞ்சக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவர்கள், சுற்றுவட்டாரப் பகு்தி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது வழக்கம். அந்தவகையில் தூய நெஞ்சக் கல்லூரியின் இயற்பியல் துறை மற்றும் ஓசூர் அரிமா சங்கம் இணைந்து
Lab to Land என்ற தலைப்பில், கிராமப்புற மாணவ – மாணவிகளுக்கும், ஊர் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதன் படி முதல் நாள் நிகழ்ச்சியாக அங்கநாத வலசை கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் உயர் கல்வி, போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து கே.பாப்பாரப்பட்டி கிராமத்தில், மத்திய மாநில அரசு வழங்கும் கிராமப்புற திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு, கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான குறு நாடகம் நடத்தப்பட்டு, கிராம புறங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியை கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியர் ரமேஷ் ஒருங்கிணைத்து செயல்படுத்திய நிலையில், ஓசூர் அரிமா சங்கத்தின் தலைவர்கள் மது மற்றும் கருணாநிதி உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
