திரை கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் வாக்காக மாறுமா என நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என பதில் அளித்து சென்றார்.

ஜெயிலர்2 திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் கோவை வந்தார்.முன்னதாக விமான நிலையத்தில் Yatri Sewa Diwas – தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் படுகர் நடனமாடி பயணிகளை வரவேற்றனர்.

அப்போது, சென்னையிலிருந்து வந்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய ரஜினிகாந்த்,ஜெயிலர் 2 திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக கேரளா செல்ல வந்துள்ளதாகவும் ஆறு நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாகவும் கூறினார். மேலும் ஜூன் மாதத்திற்கு மேல் படம் வெளியாகும் என கூறிய அவர்,திரைக் கலைஞர்களுக்கு வரக்கூடிய கூட்டம் ஓட்டாக மாறுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பவே, அதற்கு நோ கமெண்ட்ஸ் என கூறி அங்கிருந்து புறப்பட்டார்….