
கோவை, ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர் எஸ் மாருதி பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக குமரகுரு கல்வி குடும்பத் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், சர்வதேச ரோட்டரி அமைப்பின் இயக்குனர் முருகானந்தம், மற்றும் நிர்வாகிகள் செல்லா ராகவேந்திரன், ராஜசேகர், சீனிவாசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்எஸ் மாருதி அனைவரது மத்தியிலும் கூறியதாவது..
மிகப்பெரிய சமுதாய சேவை அமைப்பான ரோட்டரியில் வருகின்ற நாட்கள் கோவை மாவட்டத்திற்கு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்த உள்ளோம், 100க்கும் மேற்பட்ட கிராமங்களை தத்தெடுத்து மேம்படுத்த உள்ளோம், போதையில்லா கோவை, ஆரோக்கியமான சமுதாயம், பெண்கள் மேம்பாடு, என பல்வேறு திட்டங்களை வரக்கூடிய நாட்களில் செயல்படுத்த உள்ளோம்.
இயற்கையை மேம்படுத்த ஒரு புதிய கட்டமைப்பை ரோட்டரி கட்டமைப்பாக உருவாக்க உள்ளது. சமுதாய மேம்பாட்டிற்கு அர்ப்பணிப்பு உணர்வோடு நாங்கள் சேவைகளை முன்னெடுக்க உள்ளோம் என்று கூறினார்.
பாரதிய வித்யா பவன் மற்றும் குமரகுரு கல்வி குழுமத்தின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் கூறுகையில்.. சமுதாயத்திற்கு மிகப்பெரிய தேவை இது போன்ற ரோட்டரி அமைப்புகள் இதை தங்களை அர்ப்பணித்து பல்வேறு சமூக பணிகளை முன்னெடுக்க உள்ள ஆளுநர் மாருதி உள்ளிட்ட நிர்வாகிகளை பாராட்டுவோம்
விழாவில் பல்வேறு ரோட்டரி அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்று புதிய நிர்வாகிகளை வாழ்த்தினார்.
