நேசனல் கராத்தே பெடரேசன் சார்பில் தென்மாநில அளவிலான கராத்தே போட்டி1300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் நேசனல் கராத்தே பெடரேசன் சார்பில் 2 நாட்கள் நடைபெற்ற தென்மாநில அளவிலான கராத்தே போட்டியில், பல்வேறு மாநிலங்களில் இருந்து 1300 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு அசத்தினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் கல்லூரி வளாகத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நேசனல் கராத்தே பெடரேசன் சார்பில் தென் மாநில அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 1300க்கும் மேற்பட்ட கராத்தே போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

8 முதல் 10, 11 முதல் 12, 13 முதல் 14, 17, 18 என தனித்தனியாக வயதுக்கு ஏற்றால் போல் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் நடுவர்களாக தலைமை பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் 60 பேர் பங்கேற்றனர்.

விருவிருப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு தங்களது தற்காப்பு கலையான கராத்தே திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.

போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தேசிய கராத்தே பெடரேசன் செயலாளர் மனோஜ் குமார் மிஸ்ரா பதக்கங்கள் மற்றும் சான்றுகளுடன் கூடிய சுழல் கோப்பைகள் வழங்கினார்.